அல்லாஹ்வின் திருப்பெயரால்…
தஸ்பீஹ் செய்யும் காலணி!
தஃலீம் ஓர் ஆய்வு! (3)
-
அபூ பௌஸீமா -
சல்மான் ருஷ்டியின் ஆசிரியர் யார் என்பதை இனம் காணுவது
அவ்வளவு பெரிய் விடயமே அல்ல! அவரின் ஆக்கங்களுக்கான தீனி, தீன் என்ற
பெயரிலே பள்ளிகளில் வலம் வருகிறது. அளப்பரிய கப்ஸாக்கள்
நிறைந்து வழியும் தஃலீம் கிதாபின் அமல்களின் சிறப்புகள் என்ற பகுதியில் இருந்து
ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
என்னிடம் இருக்கும் அமல்களின் சிறப்பு என்ற புத்தகத்தில்
தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதியில் 101வது பக்கத்தில்
தஸ்பீஹ் செய்யும் காலணி என்ற தலைப்பில் இக்கதையை வாசிக்கலாம்.
பிரபல சூஃபி, ஷைகு அப்துல் வாஹிது ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகிறார்கள். “ஒரு நாள் இரவு எனக்குத் தூக்கம் மிகைக்கவே
வழக்கமாக ஓதும் திக்ருகளை ஓதாமல் தூங்கி விட்டேன். கனவில் அழகான ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடைகள் அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகளும் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. அவள் என்னை நோக்கி, ‘நீர் என்னை அடைய முயற்சி செய்வீராக! நான் உம்மை அடைய முயற்சி செய்கிறேன்!’ என்று கூறிச் சில பேரின்பக் கீதங்களைப்
பாடினாள். பிறகு
நான் விழித்துக் கொண்டேன். இனிமேல்
இரவில் தூங்கக்கூடாது என்று சத்தியமிட்டுக் கொண்டேன்.”
இதன்பின் அன்னார் நாற்பது ஆண்டுகள்
இஷாவுக்குச் செய்த உலூவுடன் சுப்ஹையும் தொழுது வந்தார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தக் கதையை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இதை
வாசிக்கும்போது இதன் கதைக்குள்ளே இருக்கக்கூடிய ஆபாசத்தைப் பலர் விளங்கிக்
கொள்வதில்லை, அல்லது விளங்கியதாகக் காட்டிக் கொள்வதில்லை, அல்லது
பக்தியோடு தலையில் கைவைத்துக் கொண்டு கண்மூடி, வாய்பொத்தி, சூஃபித்துவத்தை
மார்க்கமாக ஏற்று மௌனித்து விடுகிறார்கள்.
அப்படியுமல்ல, உலமாக்கள்
முன்னின்று நடத்துகிற காரணத்தினால் பேசாமலிருந்து விடுகிறார்கள், அல்லது
பெரும்பான்மையான மக்கள் வாய்மூடி இருக்கிறார்களே, நமக்கேன்
இந்த வம்பு என்று தானுண்டு தன் வேலையுண்டு என்ற எண்ணப்பாட்டில் எப்படியோ
வாழ்ந்துவிட்டுப் போவோம் என்றிருக்கிறார்கள். இவ்வாறு
இவர்கள் செய்வதனால் முன் சொன்னது போல சூஃபித்துவம் இவர்களுக்குள் புகுந்து இணை
வைப்பென்ற நிரந்தர நரகத்திலாகும் கொடிய அநியாயத்தில் ஆகி விடுகிறார்கள்.
உண்மைக்குப் புறம்பாக சொல்லப்படும் கதைகளை மௌனம் காத்து
ஏற்றுக் கொள்வதனால், ஜக்கரியா ஸாஹிப் இந்தச் சமூகத்தை வழிகேட்டின்பால் இட்டுச்
சென்றுள்ளார். அல்லாஹ்வின் தஸ்பீஹ்களை முன்னிறுத்திக் காமக் கதைகள
மார்க்கம் என்று எழுதி வைத்துள்ளார்.
இவருடைய கதைகளில் வரும் ‘பிரபல’ ஷைகுக்குக்
கனவில்கூட தெரிவது அழகான பெண்கள்தான்! அழகான பெண்ணை அவள்
உடுத்தியிருக்கும் உடையோடு வர்ணித்துவிட்டு தமது மாணாக்கர் தம்மைப்பற்றி மோசமாக நினைத்து
விடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டதனால் அவள் போட்டிருக்கும் காலணி தஸ்பீஹ்
செய்ததாகக் கதை விடுகிறார். இந்த ஜடப்பொருள் தஸ்பீஹ் செய்கிறதாம்! அதை
அணிந்திருக்கக்கூடிய அழகி, பச்சைப் பட்டாடை உடுத்திய அழகி, காதல் கணை
தொடுக்கிறாள் ஜக்கரிய்யா ஸாஹிபின் கதையில்!
தஸ்பீஹ் செய்யக்கூடிய காலணி ஒரு காமப்பாட்டுப் பாடும்
ஒருத்தியின் கால்களை அலங்கரிக்கிறது என்பதுதான் கதை!
அந்தப் பச்சைப் பாவாடை ஏன் தஸ்பீஹ் செய்யவில்லை? நஜீஸாகி
விட்டதோ?
அல்லாஹ்வைப் புகழும் தஸ்பீஹ் எங்கே பொருந்துகிறது
ஜக்கரிய்யா ஸாஹிபின் கிஸ்ஸாக்களில் என்று பார்த்தீர்களா? அது
காலுக்குச் செருப்பாகப் போடப்பட்டிருக்கிறது!
சல்மான் ருஷ்டியோடு கை கோர்த்திருக்கிறார், இல்லை, சல்மான்
ருஷ்டி ஜக்கரிய்யா ஸாஹிபோடு கை கோர்த்திருக்கிறார் என்பது தெரிகிறதா? இன்னும்
கண்மூடிக் குருடாகவே இருக்கத் தீர்மானித்திருப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய
முடியாது!
அல்லாஹ்வுடைய எச்சரிக்கையை ஏளனமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவன்
அனைத்தையும் அறிந்தவன். அவன் தவறு செய்யாத நீதிபதி. தானே
இரட்சகன் என்று பிரகடனப் படுத்திய ஃபிர்அவ்னுடைய ஆட்களுக்கும், அதற்கு
முன்னர் இருந்தோருக்கும் நடந்ததை ஞாபகமூட்டி எச்சரிக்கிறான்: “ஃபிர்அவ்னின் ஆடகளுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும்
ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன். எந்த ஒரு சமுதாயமும்
தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ்
மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.” (அல்குர்ஆன் 8:52-53)
ஆகவே, அல்லாஹ்வின் கட்டளைக்கும் அவனது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் மாறாகவே நடப்போம் என்று கங்கணம் கட்டிக்
கொண்டுள்ள சமூகம் அல்லாஹ்வின் சாபத்திற்காளாகும் என்பதில் சந்தேகமில்லை.
அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைத் துச்சமாக மதித்து இப்படிப்பட்ட
கதைகள் மூலம் அல்லாஹ்வின் வேதத்தை ஏளனப்படுத்தக் கூடியவர்கள்; அப்பட்ப்பட்ட
ஏளனக் கதைகளைப் பள்ளிகளில் வாசிப்பதற்கு திறந்த அனுமதியளித்திருக்கக்கூடிய பள்ளி
நிருவாகிகள்; இந்தக் கதைகளுக்கு மார்க்க அந்தஸ்துக் கொடுத்து அவற்றை
ஊக்கப்படுத்தும் உலமாக்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும்!
வேதம் ஓதும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து அல்லாஹ்
நம்மனைவரையும் காப்பாற்றி, யார் யாருக்கெல்லாம் நேர்வழியைக் காட்டி அவனுடைய
நல்லடியார்களாகப் பொருந்திக் கொண்டானோ அவர்களில் நம்மையும் சேர்த்து
சுட்டெரிக்கும் அந்தப் பெரு நெருப்பிலிருந்து மறுமையில் நம்மை விடுதலை செய்வானாக!
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment