அல்லாஹ்வின் பெயரால்…..
இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!
(4)
அபூ
பௌஸீமா
இனி இவர்களுக்கு இருக்கவே இருக்கிறது
ஜிஹாத்!
பிரகடனம் செய்கிறார்கள்! யுத்தம் முடிவுக்கு வந்த பின் மீண்டும் தற்புகழ் பாடும்
தலைவர்களாகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு
மாறு செய்வதில் அவர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். மதுச்சாலைகள், இரவுக் களியாட்ட விடுதிகள் மீண்டும் இழந்து போன நாட்களையும் மீட்டெடுப்பதைப்போல்
ஆங்காரமாக ஓலமிடுகின்றன இவர்களது ஆட்சியில்!
அண்மைக்காலச் சரித்திரத்தில் உதாரணங்கள்
ஏராளம். (நடந்த நடப்புகள்தான் இப்படிப்பட்ட கருத்துக்கள் உருவாகக் காரணிகளாக அமைகின்றன. அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ்தான்
அறிவான். தூய்மையான எண்ணத்துடன் செயல்பட்டவர்களை இது குறிக்காது.)
‘தற்கொலைத் தாக்குதல்
ஆகும்; சாதாரண பொதுமக்கள்
சாவதைக் கண்டு கொள்ள வேண்டியதில்லை; நமது தரப்பிலும் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்,’ என்றெல்லாம் தர்க்கங்கள்!
நமது தலைமைத்துவங்களின்
நம்பகத்தன்மை
தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மற்றுமொரு
முக்கியமான அம்சமான நம்பகத்தன்மையை நாங்கள் கண்டோம். அணுகுண்டுத் தயாரிப்பில் நாடு ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில்
பதவிக்கு வந்த ஒருவர், அடுத்த தேர்தலிலே
தோல்வி கண்டு பதவியிறக்கப்பட்ட போது, தம் நாடு அவர் பதவிக்கு வருவதற்கு முன்பிருந்தே அணுகுண்டுத் தயாரிப்பில் ஈடுபடுகிறது
என்று உலகுக்கெல்லாம் சொல்லித் திரிந்தார். எவ்வளவு பெரிய இக்கட்டான நிலைக்கு அந்த நாட்டின் புதிய
அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அவர் சொல்வது பொய்யென்று நிரூபிக்கப் பொய்யான ஆவணங்களைத்
தயாரித்து உலகத்திற்கு பொய்யையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாட்டின் பாதுகாப்புக்கான விடயத்தில் பொய் சொல்வது ஆகும்
என்ற கட்டம் இங்கே கடைப்பிடிக்கப்பட்டாலும் உலகம் அதை நம்பத் தயாராக இருக்கவில்லை.
அரசு தம் மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சிப்படிகளை எடுத்து நடைமுறைப் படுத்த
முடியாத இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டது. சுய நல அரசியல் செய்யும் இப்படிப்பட்டவர்களை மக்கள்
தேர்தல்களில் தூக்கியெறிந்துவிட வேண்டும்.
அது மட்டுமா? இன்று இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஆட்சித் தலைவர்கள்
பேசுவதெல்லாம் தேசியம். தேசியம் என்பது
இஸ்லாத்தில் இல்லாதது. முஸ்லிம்கள்
அனைவரும் சகோதரர்கள். இவர்களுடைய
ஆட்சியில் எங்கே அந்தச் சகோதரத்துவம்? பணமும் அதனால் வரும் சொகுசுகளும்தான் இவர்களின் வாழ்க்கையாக ஆகி
விட்டிருக்கிறது.
முன்னேற்பாடும் பாதுகாப்பும்
எதிரியின் தாக்குதல்களிலிருந்து
தப்பித்துக் கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதென்பது யார்
யுத்தத்திற்குத் தயாராகிறாரோ அவரின் முழுமுதற் கடமை. யாரும் இதை மறுக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ முடியாது. விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இக்காலக்கட்டத்தில் ஆகாயத்தில்
நீந்திவந்த ஏவுகணைகளை குறிபார்த்து ஆகாயத்திலே வெடித்துச் சிதறச் செய்த பாதுகாப்பு
அரணாக விளங்கிய மாற்று ஏவுகணைகளைக் கண்டோம்.
நிச்சயமாக, யார் போர்க்களத்திற்குச் செல்கிறாரோ அவர் அதற்கான முன்
ஆயத்தங்களைச் செய்து கொள்வது யுத்த நியதி. யுத்தத்திற்குச் செல்லும் ஒருவர் அன்று வாள் தூக்கினால்
அவரை யாரும் குறை கூற முடியாததைப்போலவே இன்று போர் விமானங்களையும், தீப்பிழம்புகளாக வெடித்துச் சிதறும் குண்டுகளையும்
தன்னகத்தே கொள்வதைக் குற்றமென்று சொல்ல முடியாது.
ஒரு நாடு மற்றொரு நாட்டினால்
ஆக்கிரமிக்கப்படும்போது அந்நாட்டின் தலைவன் நிச்சயமாக புத்திசாதுரியத்துடன் தனது
படைகளை நடத்திச் செல்ல வேண்டும். அவன் தனது நாட்டின்
தலைவனாக இருக்கும்போது அதன் பாதுகாப்பிற்குத் தேவையானவற்றை தன் நாட்டின் வசமாக்கிக்
கொள்ளல் வேண்டும்.
“மேலும், உங்களால் இயன்றளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராக தயாரித்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும்
நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய
மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை
அறிவான். அல்லாஹ்வின் பாதையில்
நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.” (அல்குர்ஆன் ஸூரா
அல்அன்ஃபால் 8:60)
அநியாயக்காரர்களோடு போர் செய்வதற்குத் தயாராவது
பற்றி எவ்வளவு தெளிவாக அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்குச் சொல்லிக்
காட்டுகிறான். இந்தக் கட்டளையை
நமது முஸ்லிம் நாடுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய நாடுகளின் தலைவர்கள்
இன்று நடைமுறைப் படுத்துகிறார்களா? உலக அரங்கிலே நாடு நாடுகளெல்லாம் தத்தமது நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுத
உற்பத்தி செய்வதற்கும் நவீன கண்டு பிடிப்புகளுக்காக ஆய்வுகள் செய்தும் தம்
முப்படைகளையும் நவீனமயப்படுத்துகின்றன.
அதற்கும் மேலாகத் தமது ஊடகங்களை
முடுக்கிவிட்டு உலக அரங்கிலே அவர்களுக்குச் சாதகமாக மக்கள் அபிப்பிராயத்தை
ஏற்புடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்கிடப்பட்ட கட்டளை மேற்கூறிய
அல்குர்ஆன் வசனத்தில் தெளிவாக இருக்கிறது. ஆனால், அவ்வசனத்தினடிப்படையில்
நாம் இயங்குகின்றோமா? இன்று புதுப்புது
ஆயுதங்களுக்குச் சொந்தக்காரர்களாவது யார்? ஆய்வுகள் மேற்கொண்டு பரீட்சித்துப் பார்த்து அவற்றின்
வெற்றி தோல்விகளைக் கணக்கிட்டு அவற்றை நுண்ணியமாக வளர்த்து குதப்படுத்தி
வைத்திருப்பவர்கள்தான்.
ஏன், முஸ்லிம்கள் இந்த தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துத் தமது
நாட்டின் மீது தாக்குதலுக்கு வரும் ஏவுகணைகளை, விமானங்களைச் சிதறடிக்க அனுமதிக்கப் படவில்லையா? நவீன போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கு அவர்களிடம்
பொருளாதார வசதிகள் இல்லையா அல்லது அந்தத் துறையிலே துறைசார் நிபுணர்கள் இல்லையா?
வாய்ச்சவடால் பாதுகாப்பு அரணாக இருக்க
முடியாது! நாட்டின் செல்வங்களை
மேற்கத்திய நாடுகளில் தத்தமது தனிமனித கணக்குகளில் வைத்து தமது குடும்பம் மட்டுமே
சொகுசான வாழ்க்கை வாழ வழிவகை செய்து பாமர மக்களை எதிரிகளின் குண்டு வீச்சுக்குப்
பலிக்கடாய்களாக திறந்தவெளியில் விடுபவர்களைத் தலைவர்களாக ஆக்கிக் கொண்டதன்
விளைவுகளுக்கு யார் பொறுப்பு?
முன்னெச்சரிக்கையும் தூர நோக்கும்
போர் செய்யும் ஓர் ஆட்சித் தலைவன்
தன்னுடைய பிரஜைகளின் பாதுகாப்பைப் பற்றியும் கட்டாயம் சிந்திக்க வேண்டும். ஹுதைபிய்யா உடன்படிக்கை இதற்கு ஒரு மிகப் பெரிய சான்று. அந்த உடன்படிக்கையின் பின்னணியில் உள்ள படிப்பினைகள் ஏராளம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித்
தரப்பட்ட அந்த வழிமுறை இன்று முஸ்லிமல்லாதவர்களால் கூட வியந்துரைக்கப்படுவது
கண்கூடு.
1973ம் ஆண்டு நடைபெற்ற எகிப்து – இஸ்ரவேல்
யுத்தத்தின்போது சுற்றி வலைக்கப்பட்ட சுமார் 75,000 பேர் கொண்ட தனது படைப்பிரிவினரின்
பாதுகாப்புக் கருதி இடையிலே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் அன்றைய
எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாத். அன்வர் சதாத்தின்
ஆட்சி இஸ்லாமிய ஆட்சியல்ல. ஆனால், அவர் அன்று கையாண்ட தந்திரம் உலகத்தின் வல்லரசுகள்
மத்தியில் மத்திய கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதொன்று என்ற எண்ணத்தை
முன்னர் எப்போதுமில்லாதவாறு தூண்டிவிட்டது.
No comments:
Post a Comment