அல்லாஹ்வின் பெயரால்…..
இன்றைய யுத்தங்களும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்!
(3)
அபூ
பௌஸீமா
மேலும், அல்லாஹ் திரும்பத் திரும்பக் கூறுகிறான்: “விசுவாசிகளின் கூற்றாக
இருப்பதெல்லாம் – அவர்களுக்கிடையே (அல்லாஹ்வுடைய தூதராகிய) அவர் தீர்ப்புக்
கூறுவதற்காக அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் (வருமாறு) அவர்கள் அழைக்கப்பட்டால் – ‘நாங்கள் செவியுற்றோம்; இன்னும் கீழ்ப்படிந்தோம்,’ என்று அவர்கள் கூறுவதுதான், இன்னும் அவர்கள்தாம்
வெற்றியாளர்கள். இன்னும், எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, இன்னும், அல்லாஹ்வை அஞ்சி, அவனைப் பயந்தும் கொள்கிறாரோ அத்தகையோர் – அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.” (அல்குர்ஆன் ஸூரா 24:51-52)
அல்லாஹ் கட்டளையிட்டுவிட்டால், அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி
விட்டால் அந்த விடயத்தில் நமக்கென்று ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு நமக்கு
எந்த அனுமதியும் இல்லை. அது எந்த விடயமானாலும் சரியே!
அன்றாட வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன்
சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம், அல்லது ஆட்சிபீடத்தில் இருக்கும் ஓர் ஆட்சியாளன்
சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம், அல்லது ஒரு நீதிபதி
தான் விசாரிக்கும் வழக்கில் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கலாம், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையின்
தீர்வு அல்லாஹ்விடத்திலும் அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலும்
இருந்தே பெறப்படல் வேண்டும்.
இஸ்லாமிய தலைமைத்துவம்
இன்று நாம் என்ன செய்கிறோம்? எங்களுக்கென்று ஒரு கிலாபத் இல்லை!
நடக்கக்கூடிய அநியாயங்களைப் பார்த்துப்
பார்த்து விரக்தியேற்பட்டு அதன் பலனாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கக்கூடியவர்கள்
சிலர் சேர்ந்து தத்தம் விளக்கங்களுக்கேற்றாற்போல் அமைப்புக்களை ஏற்பாடு செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட அமைப்புக்களுக்கே உள்ள
அறிஞர்கள்போல் இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் மார்க்கத் தீர்ப்புகளை வெளியிடுகிறார்கள்.
தலைவர் எப்படியிருந்தாலும் பரவாயில்லை, அவருக்குக் கட்டுப்பட்டுத்தான் தீர வேண்டும் என்பதைத்தான்
சிலர் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியப் பெயர்களை வைத்துக் கொண்டு இணை வைப்பை
வளர்ப்பவர்கள், அல்லாஹ்வை
மறுப்பவர்கள் தலைவராக இருந்தாலுமா அப்படிப் பின்பற்ற வேண்டும்?
பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
மார்க்கம் இஸ்லாம். சிந்திப்பவர்களுக்குத் தீர்வு அங்கே இருக்கிறது.
எந்தச் சந்தர்ப்பத்திலும் மறந்துவிடக்
கூடாத அல்லாஹ்வின் ஓர் அறிவிப்பை மீண்டும் நினைவூட்டிக் கொள்வது நமது கடமை. அழகிய முன்மாதிரி என்று அல்லாஹ்வே சொல்லும்போது அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரியை விஞ்சி நிற்கும் வேறு எந்த
முன்மாதிரியும் உலகில் இருக்க முடியாது.
அந்த முன்மாதிரியில் குறை காணுவதற்கு எந்த
ஆணுக்கும் எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை!
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எவர் எனக்குக்
கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் எனக்கு மாறு
செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். எவர் தலைவருக்குக்
கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறு
செய்தாரோ அவர் எனக்கு மாறு செய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக்
கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக்
கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும்
பாவம் அவர் மீது(ம்) சாரும்.” (அறிவிப்பவர்: அபூ
ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)
மேற்கூறிய ஹதீஸிலே மிக அழகாகச்
சொல்லப்பட்டுள்ள முன்மாதிரி தர்க்கத்திற்கப்பால் பட்டது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் முஸ்லிம்கள் தலைவரைப் பின்பற்ற வேண்டும் என்று
தெளிவாகக் கட்டளையிடுகிறார்கள். கீழ்க்காணும் ஹதீஸிலே தலைவரப் பின்பற்றுவதற்கான
நிபந்தனையையும் குறிப்பிட்டுள்ளார்கள்!
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் கூறினார்கள்: “அல்லாஹ்வுக்கு
மாறு செய்யும்படி கட்டளையிடப்படாதவரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக்
கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால்
அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது.” (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி)
இந்தக் காலத்தில் அந்தத் தலைவர் யார்?
முஸ்லிம்களுக்கு ஓர் ஆட்சியாளர் இருக்கிறாரா? அல்லாஹ்வின் பாதையில் போர்ப்
பிரகடனம் செய்யக்கூடிய உரிமையுள்ள தலைவர்கள் இன்றைய முஸ்லிம் நாடுகளில்
இருக்கிறார்களா என்பதே பெரிய கேள்விக் குறியாகி இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அவர்கள் போர்ப்பிரகடனம் செய்வதற்கு அருகதை
பெறுவது தாம் ஆட்சி செய்யும் நாட்டின் பாதுகாப்புக்கும் தமது குடிமக்களுக்கும்
எதிராக வரக்கூடிய ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகத்தான். இணை வைத்தலிலே மூழ்கிக்
கிடக்கிறது இவர்களது ஆட்சி!
தெய்வங்களாக வரிக்கப்பட்டு வணங்கப்பட்ட
சிலைகளை உடைத்து அவற்றிற்கு எந்தவிதமான சக்தியும் இல்லையென்று மக்களுக்கு
உணர்த்தியவர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பி தரைக்கு மேல்
உயர்ந்திருக்கும் அனைத்து புதைகுழிகளையும் தரைமட்டமாக்கிவிடும்படி
உத்தரவிட்டார்கள். அன்னார் அவ்வுத்தரவை அப்படியே நிறைவேற்றினார்கள்.
ஆனால், இன்று இஸ்லாமிய நாடுகள் என்று
அறியப்படும் நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் இந்த இணை வைப்புகளைத் தொடர்ந்து செய்து
கொண்டு, அதற்கப்புறம் தமக்கு இனிமேல் தனித்து நிற்க முடியாது என்ற ஒரு நிலை
உருவாகும் போது மட்டும்தான் அல்லாஹ்வை நினைவு படுத்துகிறார்கள். அப்போதும் இந்தக்
கபுறு வணக்கத்தை ஒழித்தார்களா என்றால், அதுதான் இல்லை!
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment