அளவற்ற ஆருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் பெயரால்..
பாமரன் என்று சொல்லிக் கொள்ள ஒரு முஸ்லிம் வெட்கப்பட
வேண்டும்!
- அபூ
பௌஸீமா -
ஒரு விசுவாசி தன்மானமுள்ளவன் என்பது நபி மொழி. (நூல்: முஸ்லிம். அறிவிப்பவர்: அபூஹுரைரா
ரளியல்லாஹு அன்ஹு)
அப்படியென்றால் ஒரு முஸ்லிம் தன்னைத்தானே பாமரன் என்று
சொல்லித் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
பாமர மக்கள் என்று ஓர் இனத்தை இறைவன் படைக்கவில்லை. இறைவனின் வழியில்
முயற்சிக்காமல் போனால்தான் மனிதன் பாமரனாகிறான். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று ஒரு முஸ்லிம் சொல்லிக்
கொள்ள வெட்கப்பட வேண்டும்.
இறைவனுடைய இஸ்லாமிய் மார்க்கத்தைக் கற்பது இதர எல்லாக்
கல்வியையும் கற்பதைவிட மிக சுலபமானதாகும். ஏனெனில், அல்லாஹ், “இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச்
சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை,” (அல்குர்ஆன் ஸூரா
அல்ஹஜ் 22:78)
சிரமமில்லை என்று அல்லாஹ் கூறிவிட்ட பிறகு அதைச்
சிரமமாக்கிக் கொள்வது யாருடைய தவறு? இஸ்லாத்தைக் கற்க தனிக் கல்வி முறை எதுவுமில்லை. கற்க வேண்டும்
என்ற ஆர்வமும் அதற்கான விடாமுயற்சியும் இருந்தால் மிக இலகுவாக மார்க்கத்தைக்
கற்கலாம்.
“எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ நிச்சயமாக
நாம் அவர்களை நம்முடைய நேரான வழியில் செலுத்துவோம்.” (அல்குர்ஆன் ஸூரா அல்அன்கபூத்
29:69)
இறைவனின் இந்த வசனம் நீங்களு அறிஞராகலாம் என்று
தூண்டவில்லையா?
இஸ்லாத்தில் சங்கைக்குரிய, வணக்கத்திற்குரிய போதகரகள், பூசாரிகள், பாதிரிகள், குருக்கள் இல்லை. வத்திக்கானும் இல்லை; குருத்துவார்களும் இல்லை!
தஃவா என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரின் முழு நேரத் தொழிலல்ல! அது ஒரு பகுதி
நேர நடவடிக்கையுமல்ல! அது மாற்றுமத அமைப்புக்கள், கம்யூனிஸ எதிர்ப்புக்கள் காரணமாகச் செய்யப்படுவதுமல்ல!
தஃவா என்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய பொறுப்பாகும். அவர் ஆட்சியாளர், ஆளப்படுபவர், தலைவர் அல்லது
அவரைப் பின்பற்றுபவர், அறிஞர் அல்லது மாணவன், படைத்தளபதி அல்லது படைவீரர், வியாபாரி அல்லது விவசாயி, செல்வந்தன் அல்லது ஏழை, ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் உலகின் எந்தக் கோணத்தில்
வாழ்ந்தாலும் சரியே! இதில் ஒருவருக்கொருவர் எந்த வித்தியாசமுமின்றி ஈடுபாடு
கொள்ள வேண்டும். எந்தச்
சந்தர்ப்பத்திலும் தஃவாவை ஒத்தி வைக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ முடியாது. முதலிடம்
கொடுக்கப்பட வேண்டிய ஒரு கடமையாகும் இது.
அல்குர்ஆனும் அல்ஹதீஸும்தான் வழிகாட்டி!
இவ்வழிகாட்டியைப் பின்பற்றிக் கொண்டு செல்லும் அதே வேளையில்
நேர்வழிக்கான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிச்
செய்வதுதான், இன்ஷா அல்லாஹ், சுட்டெரிக்கும்
பெரு நெருப்பினாலான நரகத்திலிருந்து விடுதலை பெற ஒரு காரணியாக இருக்கும்.
வ ஆகிர் தஃவானா அனில்ஹம்துலில்லாஹ்!
குறிப்பு: இது என்னால் 2007ம் ஆண்டு அச்சிட்டு அக்குறணையில் விநியோகிக்கப்பட்ட ஒரு
துண்டுப்பிரசுரம்.
No comments:
Post a Comment